சிதம்பரம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி


சிதம்பரம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 4 Jan 2019 11:00 PM GMT (Updated: 4 Jan 2019 10:39 PM GMT)

சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பரங்கிப்பேட்டை,

சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவருடைய மகன் கார்த்திகேயன்(வயது 20). இவர் சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய நண்பர்கள் சிதம்பரம் முத்துமாணிக்கம் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன்(22), அஜித் (22). இவர்கள் இருவரும் அதே கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகின்றனர்.

இவர்கள் 3 பேரும் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றனர். பின்னர் மதிய உணவு சாப்பிடுவதற்காக 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சி.முட்லூருக்கு சென்றனர். பின்னர் அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் கல்லூரிக்கு திரும்பினர். மோட்டார் சைக்கிளை கார்த்திகேயன் ஓட்டினார்.

கடலூர்-சிதம்பரம் புற வழிச்சாலையில் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி அருகே வந்து கொண்டிருந்த போது சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற கார் ஒன்று இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கார்த்திகேயன், பாலகிருஷ்ணன், அஜித் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து இவர்கள் 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திகேயன் பரிதாபமாக உயிரிழந்தார். பாலகிருஷ்ணன், அஜித் ஆகிய 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கிள்ளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story