சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு - நண்பர் படுகாயம்

சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானார். மேலும் அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்
குழித்துறை,
அருமனை அருகே முழுக்கோடு, கொற்றிக்காட்டுவிளையை சேர்ந்தவர் டேவிட் ஐசக். இவருடைய மகன் ஷானு (வயது 23). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். தினமும் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் வேலை முடிந்த பின்பு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அவருடன் நண்பர் ரோகன் (26) சென்றார். ரோகன் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தார். மார்த்தாண்டம் அருகே கழுவன்திட்டை பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த வீட்டின் காம்பவுண்டு சுவரில் மோதியது. இதில் நண்பர்கள் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து ஷானு மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் ஷானு பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. படுகாயம் அடைந்த ரோகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story