சிவகங்கை தெப்பக்குளத்தில் மூழ்கி துப்புரவு தொழிலாளி பலி; மனைவியின் கண் முன்பு நடந்த பரிதாபம்


சிவகங்கை தெப்பக்குளத்தில் மூழ்கி துப்புரவு தொழிலாளி பலி; மனைவியின் கண் முன்பு நடந்த பரிதாபம்
x
தினத்தந்தி 5 Jan 2019 4:35 AM IST (Updated: 5 Jan 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை தெப்பக்குளத்தில் மனைவியின் கண் முன்பு துப்புரவு தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியானார்.

சிவகங்கை,

சிவகங்கை நகராட்சியில் துப்புரவு பணியாளராக இருந்தவர் கணேசன் (வயது 55). இவர் நேற்று காலை தன்னுடைய மனைவி பாண்டியம்மாளுடன் சிவகங்கை தெப்பக்குளம் வழியாக சென்றார். அப்போது மனைவியிடம் தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு வருவதாகவும், அதுவரை படியில் அமர்ந்திருக்குமாறும் கூறி சென்றார்.

பின்பு அவர் தெப்பக்குளத்தில் இறங்கி நீந்தி குளித்தார். அப்போது தெப்பக்குளத்தின் மையப்பகுதி வரை நீந்தி சென்ற அவர் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதைப்பார்த்த படியில் அமர்ந்திருந்த மனைவி பாண்டியம்மாள், தன் கண்முன்னே கணவர் தண்ணீரில் மூழ்குவதை பார்த்து அவரை காப்பாற்றுமாறு கத்தினார்.

அப்போது அந்த பகுதியில் யாரும் இல்லாததால், அவரின் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. அதற்குள் கணேசன் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டார். வெகுநேரமாகியும் அவர் தண்ணீரை விட்டு மேலே வரவில்லை.

தகவல் அறிந்து வந்த சிவகங்கை தீயணைப்பு படையினர், தெப்பக்குளத்தில் இறங்கி சுமார் 3 மணி நேரம் போராடி கணேசனின் உடலை மீட்டனர். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மனைவியின் கண்முன்பு கணவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story