மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதி விவசாயி பலி 2 பேர் படுகாயம்


மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதி விவசாயி பலி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 6 Jan 2019 3:45 AM IST (Updated: 5 Jan 2019 11:05 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதி விவசாயி பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள எர்ரஹள்ளியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 55). விவசாயி. சம்பவத்தன்று இவரும், பையூர் அருகே உள்ள கன்னியப்பன் கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜா (32), மாரியப்பன் என்கிற மாரி (45) ஆகியோரும் மோட்டார்சைக்கிளில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள பையனப்பள்ளி கூட்டு ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற அரசு பஸ், மோட்டார்சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த துரைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ராஜாவும், மாரியப்பனும் பலத்த காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த அவர் களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் விபத்தில் இறந்த துரைராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story