உத்திரமேரூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல்
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா கருவேப்பம் பூண்டி கிராமத்தில் புதிதாக மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது. அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் தொட்டி கட்டும் பணியை தடுத்து ஆக்கிரமிக்க முயன்றார்.
உத்திரமேரூர்,
இது குறித்து கிராம மக்கள் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் கலெக்டர், ஆக்கிரமிப்பை அகற்றி மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணியை தொடங்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பணிகள் நடந்தது வந்தது. அப்போது அவர் வக்கீல் ஒருவருடன் சேர்ந்து பணியை தடுத்தி நிறுத்தியதாக தெரிகிறது. இதை பார்த்த கிராம மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இருவரையும் இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி காஞ்சீபுரம்- உத்திரமேரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பேரில் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story