கந்தர்வகோட்டை அருகே பரிதாபம்: சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 தொழிலாளிகள் பலி
கந்தர்வகோட்டை அருகே சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 தொழிலாளிகள் பரிதாபமாக இறந்தனர்.
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை அருகே உள்ள கள்ளுக்காரன்பட்டியை சேர்ந்தவர் சித்தவேல்(வயது 40). இவருடைய உறவினர் அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம்(50). தொழிலாளிகளான இவர்கள் நேற்று சொந்த வேலை காரணமாக ஒரு சைக்கிளில் ஆதனக்கோட்டைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து சைக்கிளில் கள்ளுக்காரன்பட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
சைக்கிளை சித்தவேல் ஓட்டினார். மாணிக்கம் பின்னால் அமர்ந்திருந்தார். சோழகம்பட்டி அருகே வந்தபோது, பின்னால் புதுக்கோட்டையில் இருந்து வேலாடிப்பட்டியை சேர்ந்த குணசேகரன்(48) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், சித்தவேலின் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சித்தவேல், குணசேகரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் சித்தவேல், குணசேகரனை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சித்தவேலை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் குணசேகரன் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த ஆதனக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணிக்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story