திருவாரூரில் அ.ம.மு.க. வெற்றி பெறாது வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி
திருவாரூரில் அ.ம.மு.க. வெற்றி பெறாது என வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
தஞ்சாவூர்,
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 52 பேர் விருப்ப மனு கொடுத்து இருந்தனர். அவர்களிடம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் நேர்காணல் நடத்தினர். 2 நாட்களில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார். அதன்படி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்.
அவரிடம்(டி.டி.வி.தினகரன்) இருந்த செந்தில்பாலாஜி விலகி பெரிய விழா எடுத்து தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார். தினமும் அ.ம.மு.க.வில் இருந்து பலர் விலகி நமது இயக்கத்திலும், தி.மு.க.விலும் இணைந்து வருகின்றனர். இதை மறைப்பதற்கும், நான் தான் சக்தி உள்ளவன் என்பதை காட்டுவதற்காவும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் எப்படி நடந்தது? என தேர்தல் கமிஷனுக்கும், மக்களுக்கும் தெரியும். ரூ.20 என்ன செய்தது என்பதும் எல்லோருக்கும் தெரியும்.
திருவாரூரில் அ.ம.மு.க. வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story