“ஜெ.தீபாவை அ.தி.மு.க.வில் சேர்க்க தயார்” ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


“ஜெ.தீபாவை அ.தி.மு.க.வில் சேர்க்க தயார்” ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 7 Jan 2019 4:45 AM IST (Updated: 7 Jan 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

ஜெ.தீபா அ.தி.மு.க.வுக்கு வந்தால் அவரை சேர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:–

திருவாரூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரின் பெயர் இன்று காலை 10 மணியளவில் அறிவிக்கப்படும். திருவாரூரில், தேர்தல் நடத்துவது குறித்து பல கட்சிகள் தங்களது கருத்தை தேர்தல் ஆணையத்திடம் கூறியிருக்கின்றனர். முடிவெடுக்க வேண்டியது தேர்தல் ஆணையம் தான்.

பல்வேறு கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். மேலும் அதில் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது.

அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் இணையலாம். அந்த வகையில் ஜெ.தீபா அ.தி.மு.க.வில் சேர விரும்பினால் அவரை இணைத்துக் கொள்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் பொருட்கள் உறுதியாக கிடைக்கும்.

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் அ.தி.மு.க. தனித்து போட்டியிடுமா, அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து அவர் சென்னை கிளம்பி சென்று விட்டார்.


Next Story