திருவாரூரில் இடைத்தேர்தல் தேவையில்லாதது; மதுரையில் ஜி.கே.வாசன் பேட்டி


திருவாரூரில் இடைத்தேர்தல் தேவையில்லாதது; மதுரையில் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 7 Jan 2019 5:00 AM IST (Updated: 7 Jan 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

மதுரை விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மதுரை,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டது திருவாரூர் மாவட்டத்தில் தான். எனவே திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்குவதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். அதை விட்டு விட்டு, இடைத்தேர்தல் என்பது தேவையில்லாது. தேர்தலை விட நிவாரணம் வழங்குவதே அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.

இடைத்தேர்தல் பற்றிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. முடிவின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்துவது குறித்து தெரியவரும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்தன்மையோடு செயல்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் வரை கட்சியை பலப்படுத்தி கொள்வதற்கான பணியை மேற்கொள்வோம். தேர்தல் அறிவித்த பின்னர், மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். தற்போது ஸ்மார்ட் கார்டு வழங்காமல், அதனை அரசு நிறுத்தி வைத்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் புதிதாக விண்ணப்பிப்போருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story