மாவட்ட செய்திகள்

முத்தலாக் மசோதாவை திரும்ப பெறவேண்டும் மகளிர் அமைப்பு மாநில பொதுக்குழுவில் வலியுறுத்தல் + "||" + The Muthalak Bill should be withdrawn by the Women's Organization in the State General Assembly

முத்தலாக் மசோதாவை திரும்ப பெறவேண்டும் மகளிர் அமைப்பு மாநில பொதுக்குழுவில் வலியுறுத்தல்

முத்தலாக் மசோதாவை திரும்ப பெறவேண்டும் மகளிர் அமைப்பு மாநில பொதுக்குழுவில் வலியுறுத்தல்
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் அமைப்பான உமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது.
திருச்சி,

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் அமைப்பான உமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் 2019 முதல் 3 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டது. தேசிய செயலாளர் ரைஹானாத் தேர்தல் அதிகாரியாக இருந்து இதனை நடத்தினார். புதிய தலைவராக நஜ்மாபேகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில பொதுச்செயலாளராக நசீமா பானு, துணை தலைவராக தவலத்தியா, செயலாளர்களாக பாத்திமாகனி, காலிதா, பொருளாளராக சபியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மத்திய அரசு முத்தலாக் மசோதாவை திரும்ப பெறவேண்டும், பெண்களின் பாதுகாப்பையும் உரிமையையும் வலியுறுத்தி தேசிய பிரசாரம் நடத்துவது, கர்ப்பிணி பெண்களுக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் செலுத்திய பிரச்சினையில் அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கை கண்டிப்பது, முஸ்லிம் ஆயுள் சிறைகைதிகள் மற்றும் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அடைந்த 7 தமிழர்களை விடுதலை செய்யவேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவோம், நமது பாதுகாப்புக்காக போராடுவோம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேராசிரியை சுந்தர வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. மரக்கன்று நட்டு செல்பி எடுத்து கொள்ளுங்கள்; பொதுமக்களிடம் மத்திய மந்திரி வலியுறுத்தல்
மரக்கன்று நட்டு செல்பி எடுத்து கொள்ளுங்கள் என பொதுமக்களை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தி உள்ளார்.
2. தஞ்சையில் திறந்தவெளி மதுபான கூடமாக செயல்படும் அரண்மனை வளாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தஞ்சையில் திறந்தவெளி மதுபான கூடமாக அரண்மனை வளாகம் செயல்பட்டு வருகிறது. கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
3. கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை வியாபாரிகள் வலியுறுத்தல்
கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
4. ஞாயிற்றுக்கிழமையும் கேண்டீன் செயல்பட வேண்டும் முன்னாள் படைவீரர் சங்கம் வலியுறுத்தல்
ஞாயிற்றுக்கிழமையும் கேண்டீன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் படைவீரர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
5. விவசாயிகளின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி தீவிரம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
செம்பனார்கோவில் அருகே விவசாயிகளின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.