ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி


ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி
x
தினத்தந்தி 7 Jan 2019 7:50 AM GMT (Updated: 7 Jan 2019 7:50 AM GMT)

வங்கிகளின் வங்கி என அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியில் அதிகாரியாக பணிபுரிவது இளைஞர்கள் பலரின் கனவாகும்.

தற்போது ரிசர்வ் வங்கியில் ‘கிரேடு-சி’ தரத்திலான அதிகாரி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 61 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், எம்.பி.ஏ. படித்தவர்கள், இது தொடர்பான முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., படித்து பணி அனுபவம் பெற்றவர்கள், பி.இ., பி.டெக், எம்.டெக். படித்தவர்களுக்கு பணி உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம்.

விண்ணப்பதாரர் 1-12-2018-ந் தேதியில் 25 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் ரூ.100 செலுத்தினால் போதுமானது. இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நாளை (8-ந் தேதி) விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.rbi.org.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story