மாவட்ட செய்திகள்

துணை ராணுவத்தில் மருத்துவ அதிகாரி வேலை + "||" + The medical officer works in the sub-army

துணை ராணுவத்தில் மருத்துவ அதிகாரி வேலை

துணை ராணுவத்தில் மருத்துவ அதிகாரி வேலை
துணை ராணுவ படைகளில் ஒன்று பி.எஸ்.எப். தற்போது இந்த படைப்பிரிவில் சிறப்பு மருத்துவ அதிகாரிகள் மற்றும் பல் மருத்துவர் மற்றும் பொது மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 79 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
சிறப்பு மருத்துவர் பணிக்கு 18 இடங்களும், மருத்துவ அதிகாரி (பொது பணி) 59 இடங்களும், பல் மருத்துவர் பணிக்கு 2 இடங்களும் உள்ளன. எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் பொது மருத்துவ பணிக்கு விண்ணப்பிக்கலாம், முதுநிலை மருத்துவ படிப்புடன், குறிப்பிட்ட பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் சிறப்பு மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். பி.டி.எஸ். படித்தவர்கள் பல் மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 67 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஜனவரி 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விவரங்களை இணையதளத்தில் படித்து அறிந்து கொண்டு, தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம்.

விளையாட்டு வீரர்களுக்கு பணி

மற்றொரு அறிவிப்பின்படி இதே படைப்பிரிவில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 63 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைத்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. இந்த பணிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். வருகிற 17-ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டும்.

இவை பற்றிய விரிவான விவரங்களை www.bsf.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.