கடையம் அருகே பயங்கரம்: 3 பவுன் நகைக்காக மூதாட்டி குத்திக்கொலை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கடையம் அருகே, 3 பவுன் நகைக்காக மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடையம்,
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சீதாலட்சுமி (வயது 90). இவருக்கு நாராயணன் என்ற மகனும், நாககன்னி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து, நாராயணன் பாவூர்சத்திரத்திலும், நாககன்னி விக்கிரமசிங்கபுரத்திலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால் சீதாலட்சுமி மட்டும் தனியாக வசித்து வந்தார். தள்ளாடிய வயதிலும் பீடி சுற்றி உழைத்து வாழ்ந்து வந்தார்.
சீதாலட்சுமியின் சகோதரர் கணபதி. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர், கடையம் அருகே உள்ள காவூரில் வசித்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது அக்காள் சீதாலட்சுமியை வந்து பார்த்து நலம் விசாரித்து செல்வாராம். அப்போது அவருக்கு தேவையான காலை உணவையும் வாங்கி கொடுப்பாராம். மேலும் பக்கத்து வீட்டுக்காரர்களும் சீதாலட்சுமியை கவனித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை வெகுநேரம் ஆகியும் சீதாலட்சுமியின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, கட்டிலில் சீதாலட்சுமி பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் வந்து, சீதாலட்சுமி உடலை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. சீதாலட்சுமி மீது தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டும்போது, அவரது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட அடையாளத்தை பார்த்தனர். எனவே, இது இயற்கை மரணம் இல்லை என தெரிந்து, இதுபற்றி கடையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்கள்.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், அம்பை துணை சூப்பிரண்டு ஜாகிர் உசேன் ஆகியோரும் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லையில் இருந்து மோப்ப நாய் ‘ரிக்கி‘ வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது அங்கிருந்து சிறிது தூரம் வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர் அகஸ்டா, தடயவியல் நிபுணர் ஆனந்தி ஆகியோரும் வந்து தடயங்களை சேகரித்தனர்.
பின்னர் இதுதொடர்பாக கடையம் போலீசில் சீதாலட்சுமியின் மகள் நாககன்னி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சீதாலட்சுமி அணிந்திருந்த 3 பவுன் நகை மாயமானது தெரியவந்தது. எனவே, நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த கொடூரச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story