போடிமெட்டு மலைப்பாதையில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தீவிரம்


போடிமெட்டு மலைப்பாதையில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 8 Jan 2019 4:15 AM IST (Updated: 8 Jan 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் காரணமாக சேதம் அடைந்த போடிமெட்டு மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

போடி,

தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு கூடலூர்-குமுளி சாலை, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய பகுதிகள் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் போடியில் இருந்து 21 கி.மீட்டர் தொலைவில் மலைப்பாதையில் போடிமெட்டு அமைந்துள்ளது. இதன் வழியாக 17 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து கேரள மாநிலத்துக்கு வாகனங் கள் சென்று வருகின்றன.

இந்த மலைப்பாதையில் கஜா புயலின்போது பெய்த பலத்த மழைக்கு 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. இதைத்தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தடுப்புச்சுவர்களை கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ் சாலைத்துறையினருக்கு கோரிக்கைவிடுத்து வந்தனர்.

அதனை ஏற்று போடிமெட்டு மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் தடுப்புச்சுவர் கட்டும்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக அந்த இடங்களில் வாகனங்கள் குறைந்த அளவு வேகத்தில் செல்லும்படி போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். மலைப்பாதையில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story