தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் 3 கிராமத்தை சேர்ந்த பெண்கள் மனு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று 3 கிராமங்களை சேர்ந்த பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம், சாமிநகர், கால்டுவெல் காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுக்களில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. எங்கள் பகுதியில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது ஆலை நிர்வாகம் பல்வேறு உதவிகளை செய்தது. டியூசன் சென்டர், குழந்தைகள் பராமரிப்பு மையம் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த பணிகள் எதுவும் நடைபெறவில்லை. படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு இல்லை. பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. 30 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு ள்ளன. ஆகையால் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் கூறி உள்ளனர்.

Related Tags :
Next Story