தக்கலை கடையில் வாங்கிய பேரீச்சம்பழத்தில் புழு தொழிலதிபர் அதிர்ச்சி
தக்கலை கடையில் வாங்கிய பேரீச்சம்பழத்தில் புழு தொழிலதிபர் அதிர்ச்சி அடைந்தார்.
தக்கலை,
தக்கலை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், அப்பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார். அங்கு வீட்டுக்கு தேவையான பல பொருட்களை வாங்கியவர், அதனுடன் குறிப்பிட்ட நிறுவனத்தின் பேரீச்சம்பழம் பாக்கெட் ஒன்றை வாங்கி விட்டு வீடு திரும்பினார். நேற்று காலை மார்க்கெட்டில் வாங்கிய பேரீச்சம்பழத்தை பள்ளிக்கு செல்லும் தனது மகளுக்கு கொடுத்து விடுவதற்காக பாக்கெட்டை எடுத்து பிரித்தார். அப்போது, பேரீச்சம் பழத்துக்குள் வண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், மாலை அதே சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று நடந்ததை கூறி மீண்டும் குறிப்பிட்ட நிறுவனத்தின் பேரீச்சம்பழம் பாக்கெட்டை வாங்கி விட்டு வீடு திரும்பினார். காலையில் தான் ஏமாற்றம் ஆகி விட்டது, இப்போதாவது மகளுக்கு கொடுப்போம் என்று வீடு திரும்பிய அவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பேரீச்சம்பழத்திலும் புழு உயிருடன் இருந்தது.

Related Tags :
Next Story