வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை பறித்த பெயிண்டருக்கு 7 ஆண்டு ஜெயில் - வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
அரக்கோணம் அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகையை பறித்த பெயிண்டருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வேலூர்,
அரக்கோணம் அருகே உள்ள அவ்வையார் நகர் அம்மனூர் காலனியை சேர்ந்தவர் மோகன் என்கிற மோகனரங்கன் (வயது 36), பெயிண்டர். இவர், அதே பகுதியில் உள்ள காலிவாடிகண்டிகையில் வசித்து வரும் ஏகநாதன் என்பவரது வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க சென்றபோது, அவரது குடும்பத்தினருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மோகனரங்கன் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி ஏகநாதன் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த ஏகநாதன் மனைவி கவிதாவிடம் அவரச தேவைக்கு பணம் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் தற்போது வீட்டில் ஏகநாதன் இல்லை. எனவே சிறிதுநேரம் கழித்து வந்து பணம் வாங்கி செல்லும்படி கூறிவிட்டு பூஜை அறைக்கு சென்றார்.
அவரை பின்தொடர்ந்து சென்ற மோகனரங்கன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலால் கவிதாவின் கழுத்தில் குத்தினார். பின்னர் சத்தம் போடக்கூடாது என்பதற்காக கயிற்றால் கவிதாவின் கழுத்தை இறுக்கினார். இதில் அவர் மயங்கினார். இதையடுத்து மோகனரங்கன், கவிதா அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம், வளையல் உள்ளிட்ட 10 பவுன் நகைகளை பறித்து சென்றார். இதுதொடர்பாக அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனரங்கனை கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி செல்வம் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், அத்துமீறி வீடு புகுந்ததற்காக 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், 1000 ரூபாய் அபராதமும், பெண்ணை தாக்கியது மற்றும் நகை பறித்ததற்காக 7 ஆண்டுகள் சிறைதண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் மோகனரங்கனுக்கு விதிக்கப்பட்டிருந்தது.
மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத்தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த காவலுடன் மோகனரங்கன் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல்கள் லட்சுமிபிரியா, சுந்தரி ஆகியோர் ஆஜரானார்கள்.

Related Tags :
Next Story