வருகிற 31-ந்தேதிக்குள் வரிசெலுத்தாத வணிக நிறுவனங்கள், வீடுகள் மீது கடும் நடவடிக்கை திருவள்ளூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை


வருகிற 31-ந்தேதிக்குள் வரிசெலுத்தாத வணிக நிறுவனங்கள், வீடுகள் மீது கடும் நடவடிக்கை திருவள்ளூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 Jan 2019 10:15 PM GMT (Updated: 8 Jan 2019 4:59 PM GMT)

திருவள்ளூர் நகராட்சியில் வருகிற 31-ந்தேதிக்குள் வரி செலுத்தாத வீடுகள், வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் நகராட்சி ஆணையர் முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவள்ளூர் நகராட்சியில் 9 ஆயிரத்து 510 குடியிருப்புகளும், 2 ஆயிரத்து 879 கடைகளும் உள்ளது. இதுதவிர நகராட்சிக்கு சொந்தமான 57 கடைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் குத்தகை இனங்களில் இருந்து திருவள்ளூர் நகராட்சிக்கு ரூ.15 கோடியே 72 லட்சம் வருவாய் கிடைக்கிறது.

இந்த வருவாய் மூலம் ஊழியர்களுக்கு மாத சம்பளம், தெருவிளக்கு மின்கட்டணம் மற்றும் நகராட்சி வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பல்வேறு வகையான வரிகள் மற்றும் குத்தகை இனங்களுக்கான பாக்கியை செலுத்த அறிவிப்புகள் மூலம் தெரிவிக்கப்பட்டும், ஆட்டோ பிரசாரம் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.

நடப்பு ஆண்டில் வரி மற்றும் வரியில்லா இனங்களுக்காக செலுத்தவேண்டிய மொத்த தொகை ரூ.15 கோடியே 68 லட்சத்து 46 ஆயிரத்தில் ரூ.5 கோடியே 28 லட்சத்து 25 ஆயிரம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.10 கோடியே 40 லட்சத்து 21 ஆயிரம் பாக்கி நிலுவையாக உள்ளது.

இதையடுத்து நகராட்சி வரிபாக்கியை வசூலிக்க குழுக்கள் அமைத்து வீடு மற்றும் கடைகளுக்கு நேரில் சென்று வரி செலுத்த அறிவிப்புகள் அளித்து வசூல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களுக்கான பாக்கித்தொகை நிலுவையில் உள்ளதால் குடிநீர், புதை வடிகால், சாலை போன்ற அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே இம்மாதம் 31-ந் தேதிக்குள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து இனங்களுக்கான பாக்கியை செலுத்தவேண்டும். தவறும் பட்டசத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டித்தல், கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைத்தல், ஜப்தி நடவடிக்கை, நீதிமன்ற நடவடிக்கை போன்றவைகள் மேற்கொள்ளப்படும். எனவே நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை தவறாமல் செலுத்தவேண்டும். மேலும் வரி செலுத்துவோர் வசதிக்காக சனிக்கிழமைகளிலும் வரிவசூல் மையம் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story