ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்து மருந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்


ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்து மருந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2019 10:45 PM GMT (Updated: 8 Jan 2019 7:06 PM GMT)

ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்து மன்னார்குடியில் மருந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுந்தரக்கோட்டை,

ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்தும், சட்ட அனுமதி இல்லாத மருந்து விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். மருத்துவரின் உடல் பரிசோதனை இன்றி மருந்துகள் பெற்றிட வழிவகுக்கும் ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வலியுறுத்தியும் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் திருவாரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மருந்து வணிகர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மருந்து வணிகர்கள் சங்க முன்னாள் மாநில தலைவர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

இதில் மாவட்ட பொருளாளர் சிற்றரசு, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாபு, வணிகர் சங்க தாலுகா தலைவர் பழனியப்பன், வணிகர் சங்க நிர்வாகி லட்சுமணன் மற்றும் திருவாரூர், மன்னர்குடி, கொரடாச்சேரி என மாவட்டம் முழுவதும் உள்ள 400 மருந்துக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டு ஆன்லைனில் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story