சொத்து தகராறில் விவசாயி அடித்து கொலை வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு
சொத்து தகராறில் விவசாயியை அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தை அடுத்த நாவலூரை சேர்ந்தவர் சிங்காரவேலு(வயது 65). விவசாயி. இவரது உறவினர் பாக்கியராஜ்(30). இருகுடும்பத்தினருக்கும் இடையே பொதுவாக இருந்த நிலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு பாகப்பிரிவினை செய்யப்பட்டது. அதில் சரியாக தனக்கு பங்கு பிரிக்கப்படவில்லை என்றுகூறி பாக்கியராஜ் பிரச்சினை செய்துவந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிங்காரவேலுதனது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தார். அப்போது பாக்கியராஜ் அங்கு சென்றார். இதையடுத்து இருவருக்கும் பாகப்பிரிவினை தொடர்பாக மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் பாக்கியராஜ் கீழே கிடந்த கட்டையை எடுத்து சிங்காரவேலுவை சரமாரியாக தாக்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து தகராறை விலக்கினர். பின்பு பாக்கியராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த சிங்காரவேலுவை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிங்காரவேலு நேற்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (கூடுதல் பொறுப்பு) சுகந்தி வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாக்கியராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story