ஆன்லைன் விற்பனையை கண்டித்து மருந்து வணிகர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஆன்லைன் விற்பனையை கண்டித்து மருந்து வணிகர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2019 4:15 AM IST (Updated: 9 Jan 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட மருந்து வணிகர்கள் நல சங்கம் சார்பில், ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யப்படுவதற்கு தடை விதிக்கக்கோரி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்,

மாவட்ட மருந்து வணிகர்கள் நல சங்கம் சார்பில், ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யப்படுவதற்கு தடை விதிக்கக்கோரி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் விமலா திருஞானம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அனிலா ஜெய்குமார், வர்த்தகர் சங்க தலைவர் வக்கீல் ராஜூ, செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், ஆன்லைனில் குறைந்த விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால் டாக்டர்களின் பரிந்துரை இல்லாமலேயே பலர் மயக்க மருந்துகள் உள்ளிட்டவற்றை வாங்கி சென்று பயன்படுத்துகின்றனர். மேலும் ஆன்லைனில் வாங்கும் போது மருந்தின் தரம் உள்ளிட்டவற்றுக்கு உத்தரவாதம் கிடையாது. எனவே ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்து அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தன்வந்திரி பாலு, மேலை பழனியப்பன் உள்பட மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story