மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் + "||" + Civil servants strike

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கோரிக்கைக்ளை வலியுறுத்தி நேற்று அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

ராமநாதபுரம்,

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தினை திரும்ப பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுடன் மாநில அரசு ஊழியர் சங்கங்களும், வங்கி ஊழியர்கள், பொதுத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள், இன்சூரன்சு நிறுவனத்தினர் பங்கேற்பதாக அறிவித்திருந்தனர்.

இதன்படி முதல்நாளான நேற்று நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தின்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல்., எல்.ஐ.சி., வருமான வரித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். வருவாய்த்துறையில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர். சுங்கத்துறையினர், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதோடு இணைந்த சில வங்கிகள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. மற்ற வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து கழகத்தினை பொறுத்த வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 60 சதவீத தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இருக்கும் தொழிலாளர்களை கொண்டு அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டதால் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் உள்ள 36 அரசுத்துறை அலுவலகங்களில் 17,378 பேர் பணியாற்றி வரும் நிலையில் 16,349 பேர் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், 325 பேர் விடுப்பு எடுத்திருப்பதாகவும், 704 பேர் மட்டும் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இதன்படி வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றில் தான் இந்த போராட்டத்தினால் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. வருவாய்த்துறையினரின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தாலுகா அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டம் முழுவதும் 92 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர் 1750 அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை மற்றும் ஐகோர்ட்டு அறிவுறுத்தலை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் 92 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில் 1750 அரசு ஊழியர்கள் மட்டும் 6–வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
2. அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்: 336 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டன அரசு அலுவலகங்களில் பெரும் பாதிப்பு இல்லை
விருதுநகர் மாவட்டத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் 336 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டன. அரசு அலுவலகங்களில் பெரும் பாதிப்பு இல்லை.
3. தர்மபுரி மாவட்டத்தில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்
தர்மபுரி மாவட்டத்தில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். இதனால் அரசு அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.
4. மும்பையில் 9 நாளாக தொடர்ந்த பெஸ்ட் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்; பயணிகள் மகிழ்ச்சி
மும்பையில் கடந்த 9 நாளாக தொடர்ந்த பெஸ்ட் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
5. ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு
ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கக் கூட்டம் தலைவர் சேசுராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பெனிட்டோ உள்பட அனைத்து மீனவர்கள் சங்க தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.