வாழப்பாடி அருகே விபத்தில் பூ வியாபாரி பலி


வாழப்பாடி அருகே விபத்தில் பூ வியாபாரி பலி
x
தினத்தந்தி 9 Jan 2019 5:16 AM IST (Updated: 9 Jan 2019 5:16 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடி அருகே விபத்தில் பூ வியாபாரி பலினார்.

வாழப்பாடி,

வாழப்பாடி சுப்பராயபடையாச்சி தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). பூ வியாபாரி. இவர் துக்கியாம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வாழப்பாடிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்ப வந்துள்ளார். அப்போது துக்கியாம்பாளையம் கால்நடை ஆஸ்பத்திரி அருகே வந்தபோது வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறியபோது தடுமாறி அருகில் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் சரவணன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story