மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் சாலைமறியல் போராட்டம் 290 பேர் கைது
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கிருஷ்ணகிரியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 290 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ்நிலையம் அண்ணாசிலை எதிரே அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், சாலைமறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பீட்டர், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் மாதையன், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், அனைத்து இந்திய விவசாய சங்க செயலாளர் பிரகாஷ், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச. நகர கிளை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ராமசந்திரன், தொ.மு.ச. புறநகர் கிளை நிர்வாகிகள் வாசுதேவன், பொன்னுசாமி, முனிரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., ஏ.ஐ.டி.யு.சி.மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமசந்திரன், தெ.மு.ச. பேரவை செயலாளர் கிருஷ்ணன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் குமுதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
மின்வாரியத்தில் மின்சாரம் வாங்குவதில் ஊழல், வழங்குவதில் ஊழல், ஒப்பந்த முறையில் ஊழலை கண்டித்தும், மத்திய அரசின் மின்சார திருத்த மசோதாவை சட்டமாக்குவதை கண்டித்தும், நெல்லுக்கு உற்பத்தி ஆதார விலையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையொட்டி பெங்களூரு ரவுண்டானா சாலையில் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 290 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல அனைத்து மத்திய தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு தெரிவித்து கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் கடந்த 8-ந் தேதி, கிளை உறுப்பினர்கள் கோரிக்கை அட்டை அணியும் போராட்டமும், நேற்று மதியம் கோரிக்கை அட்டை அணிந்து வாயிற் முழக்க போராட்டமும் நடத்தினர்.
இதற்கு அய்பெக்டோ துணைத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் சிவப்பிரியா முன்னிலை வகித்தார். சங்க உறுப்பினர் மணிவேலு வாழ்த்தி பேசினார். முடிவில் கிளை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story