திருவாரூரில், தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் தரையில் அமர்ந்து பொதுமக்கள் குறைகேட்டார், ஸ்டாலின்
மக்களிடம் செல்வோம்..சொல்வோம்..வெல்வோம்.. என அறிவித்தபடி திருவாரூரில், தி.மு.க.சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு தரையில் அமர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
திருவாரூர்,
மக்களிடம் செல்வோம்..சொல்வோம்.. மக்களின் மனதை வெல்வோம்.. என்ற மூன்று முழக்கங்களை முன்வைத்து தமிழகத்தில் உள்ள 12,617 ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று ஊராட்சி சபை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டம் அடுத்த மாதம்(பிப்ரவரி) 17-ந் தேதி வரை நடைபெறுகிறது.
திருவாரூரில் நடைபெறும் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைப்பதற்காக நேற்று முன்தினம் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து ரெயிலில் புறப்பட்டு நேற்று காலை திருவாரூர் வந்தார்.
ரெயில் நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்றார். அங்கிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் அருகே உள்ள புலிவலம் வில்வனம்படுகை சென்றார். அங்கு தென்னந்தோப்பில் நடைபெற்ற தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை உன்னிப்பாக கேட்ட ஸ்டாலின், அவர்களுக்கு ஆலோசனை களையும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பூண்டி கலை வாணன், ஒன்றிய செயலாளர் தேவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர், கட்சியின் ஊராட்சி செயலாளர் மற்றும் நிர்வாகிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது மக்கள் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related Tags :
Next Story