குத்தாலம் அருகே காரில் கடத்திய 1,536 மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் கைது


குத்தாலம் அருகே காரில் கடத்திய 1,536 மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2019 4:30 AM IST (Updated: 10 Jan 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே காரில் கடத்திய 1,536 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குத்தாலம்,

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே மாந்தை பகுதியில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து கும்பகோணம் நோக்கி வேகமாக வந்த ஒரு காரை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அதில் 32 அட்டை பெட்டிகளில் 1,536 மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது.

மேலும், விசாரணையில் கார் டிரைவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வீட்டு வசதி வாரிய விரிவாக்க பகுதியை சேர்ந்த இருதயராஜ் மகன் ராஜ் (வயது 32) என்பதும், அவர் காரில் மதுபாட்டில்களை காரைக்காலில் இருந்து திருச்சிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் காரை மயிலாடுதுறை மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜை கைது செய்தனர்.

Next Story