தஞ்சையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தஞ்சையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2019 4:15 AM IST (Updated: 10 Jan 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் 2 நாட்கள் நடந்தது. தஞ்சை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி அரசு ஊழியர் சங்கத்தினர், தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை வடக்கு வட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணியன், மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ராஜன், மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினர் செல்வி, மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, தெற்கு வட்ட செயலாளர் பாஸ்கர், சாலை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் கோதண்டபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்படடன. முடிவில் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

Next Story