கந்து வட்டி சட்டத்தில் முன்னாள் கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது
கந்து வட்டி சட்டத்தில் முன்னாள் கவுன்சிலர் உள்பட 3 பேரை கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 47), நகை பட்டறை வைத்துள்ளார். இவர் தொழிலை விரிவுபடுத்த வடக்குமாசிவீதியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் செல்லத்துரை மற்றும் அவரது மருமகன் செந்தில்குமார் ஆகியோரிடம் தலா ரூ.5 லட்சம் வாங்கினார். இதற்காக ரமேஷ் மாதம் தோறும் ரூ.60 ஆயிரம் வட்டி செலுத்தி வந்தார். மேலும் அவர்களிடம் வங்கி காசோலை மற்றும் வெற்று பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுத்தார்.
இந்த நிலையில் அவர்கள் கூடுதல் வட்டி கேட்டு ரமேசை மிரட்டினார்களாம்.
மேலும் சின்னகண்மாய் பகுதியில் உள்ள அவரது வீடு, இடத்தையும் அபகரிக்க திட்டமிட்டு வந்தார்களாம். சம்பவத்தன்று ரமேஷ் தல்லாகுளம் பகுதியில் தனது குடும்பத்தினருடன் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த செல்லத்துரை, அவரது மருமகன் செந்தில்குமார், கார் டிரைவர் சுந்தர் ஆகியோர் ரமேசிடம் பணம் கேட்டு வாக்குவாதம் செய்து கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்து ரமேஷ் தல்லா குளம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் கந்து வட்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரை, செந்தில்குமார், டிரைவர் சுந்தர் ஆகியோரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story