மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று நடக்க இருந்த செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு தடை + "||" + There was a walk in Chennai today Nurse itamarutal Ban mixed

சென்னையில் இன்று நடக்க இருந்த செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு தடை

சென்னையில் இன்று நடக்க இருந்த செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு தடை
சென்னையில் இன்று நடக்க இருந்த செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தமிழ்நாடு சுகாதாரத்துறை ஊழியர்கள் நலச்சங்க செயலாளர் கார்த்திக், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
மதுரை,

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் 11.1.2019 அன்று (அதாவது இன்று) காலை 10.30 மணியளவில் செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது என்று மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்குனர் சார்பில் கடந்த 7-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இடமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் செவிலியர்கள் தற்போது பணியாற்றும் இடத்தில் ஒரு வருடம் பணியாற்றி, அதற்கான சான்றிதழை கலந்தாய்வில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கலந்தாய்வு நடப்பதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக அதற்குரிய அறிவிப்பை 7-ந்தேதி தான் வெளியிட்டார்கள்.

இதனால் இடமாறுதல் பெற விரும்பும் செவிலியர்கள் உடனுக்குடன் ஒரு வருடம் பணியாற்றியதற்கான சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கிறார்கள். மேலும் எந்தெந்த ஊர்களில் எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்ற தகவல் இடமாறுதல் அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.

செவிலியர் கலந்தாய்வுக்கான நடைமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் கடந்த 2007-ம் ஆண்டு தமிழக அரசு கூறி உள்ளது. முழுமையான தகவலை குறிப்பிடாமல் அவசர கதியில் தற்போது இடமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். எனவே செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு கடந்த 7-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி உரிய அவகாசம் வழங்கியும், முழுமையான தகவல்களுடனும் அறிவிப்பு வெளியிட்டு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், செவிலியர் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவில் சொத்துகளை பாதுகாக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அறநிலையத்துறை ஆணையர் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
கோவில் சொத்துகளை பாதுகாக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பிய மதுரை ஐகோர்ட்டு, இது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது. சென்னை திருத்தொண்டர் சபையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது-
2. மதுரை ஐகோர்ட்டு உத்தரவுபடி புதைக்கப்பட்ட குழந்தையின் எலும்புக்கூடு தோண்டி எடுப்பு - ஆறுமுகநேரியில் பரபரப்பு
மதுரை ஐகோர்ட்டு உத்தரவுபடி புதைக்கப்பட்ட குழந்தையின் எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் ஆறுமுகநேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
3. சட்ட விரோதமாக ஆற்றுமணல் அள்ளுவதாக வழக்கு: கடலாடி அருகில் சவடு மண் குவாரிக்கு தடை
கடலாடி அருகே உள்ள சவடு மண் குவாரி செயல்பட தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கடுகுசந்தையைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
4. அமைச்சர் நிலோபர்கபில்-அன்வர்ராஜா எம்.பி. மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்
அமைச்சர் நிலோபர் கபில், அன்வர் ராஜா எம்.பி. உள்ளிட்டவர்கள் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மதுரை வக்பு வாரிய கல்லூரி பணி நியமன முறைகேடு குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சர்தார்பாஷா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-