14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மத்திய, மாநில, பொதுத்துறை ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார்.
ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் ஜெயராமன், அரசு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் நடராஜன், இந்தியன் வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சந்துரு, அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட செயலாளர் காமராஜ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். போனஸ் மற்றும் வருங்கால வைப்பு நிதி உச்சவரம்பை நீக்கி, பணிக்கொடையை உயர்த்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மத்திய, மாநில, பொதுத்துறைகளின் பங்கு விற்பனைகளை கைவிட வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story