பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நொய்யல்,
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி(செவ்வாய்க் கிழமை)கொண்டாடப்படுகிறது. அப்போது மண்பானையில் வைக்கப்படும் பொங்கல் ருசியாக இருக்கும். இதனால், இல்லத்தரசிகளின் தேர்வு பெரும்பாலும் மண்பானைகளாவே இருக்கும். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்கள் உள்ளதால் கரூர் மாவட்டம் நொய்யல், சேமங்கி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பானை தயாரிக்க குளங்களில் உள்ள களிமண்ணை ஒரு டிப்பர் ரூ.4 ஆயிரத்து 500-க்கு வாங்கி வரப்படுகிறது. அந்த மண்ணை தண்ணீர்விட்டு கெட்டியாக சேறுபோல் குழைக்கப்படுகிறது. பின்னர் மண்பாண்டம் தயாரிக்கும் எந்திரம் மூலம் பெரியபானை, சிறிய பானை மற்றும் சட்டி, வடசட்டி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகிறது.
விலை அதிகம்
பொங்கல் வைப்பதற்கு தேவையான மண்அடுப்புகளும் தயாரிக்கப்படுகின்றன. மண்பானை தயாரிப்பதற்கான களிமண் விலை அதிகமாக இருப்பதால் மண் பானைகளுக்கு போதிய விலை கிடைக்குமா என்று தெரியவில்லை என இதில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story