ஆரணி அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி அரசுபஸ் கண்டக்டர் பலி கண்கள் தானமாக வழங்கப்பட்டது


ஆரணி அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி அரசுபஸ் கண்டக்டர் பலி கண்கள் தானமாக வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 11 Jan 2019 11:00 PM GMT (Updated: 11 Jan 2019 2:42 PM GMT)

ஆரணி அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் அரசுபஸ் கண்டக்டர் பலியானார். அவருடைய கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

ஆரணி, 

சேத்துப்பட்டு தாலுகா நாச்சியாவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 45). ஆரணி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை பணியை முடித்துவிட்டு நாச்சியாவரத்திற்கு ஆரணி–சேத்துப்பட்டு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

மருத்தூர் கூட்ரோடு அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி அங்குள்ள சிறிய பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி பள்ளத்தில் விழுந்தது. இதில் ஜெயச்சந்திரன் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற ஆரணி தாலுகா போலீசார் ஜெயச்சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயச்சந்திரனுக்கு கிரிஜா என்ற மனைவியும், ஜானகி, ஜனனி என்ற 2 மகள்களும், ஜனன் ஜெயன் என்ற மகனும் உள்ளனர்.

விபத்தில் இறந்த ஜெயச்சந்திரனின் கண்களை தானம் வழங்க அவருடைய குடும்பத்தினர் முன்வந்தனர். அதைத்தொடர்ந்து ஆரணி பட்டுநகர் அரிமா சங்கத்தினர், ஜெயச்சந்திரனின் கண்களை தானமாக பெற்றனர்.


Next Story