ஒரத்தூர், நீலமங்கலம் கிராமங்களில் 1,500 பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு


ஒரத்தூர், நீலமங்கலம் கிராமங்களில் 1,500 பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு
x
தினத்தந்தி 12 Jan 2019 4:15 AM IST (Updated: 11 Jan 2019 10:47 PM IST)
t-max-icont-min-icon

ஒரத்தூர், நீலமங்கலம் கிராமங்களில் 1,500 பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த ஒரத்தூர் ஊராட்சியில் ஒரத்தூர், நீலமங்கலம் கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. படப்பை-மணிமங்கலம் வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் என்.டி.சுந்தர் தலைமை தாங்கி 1,500 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000-த்தை வழங்கினார்.

இதில் முன்னாள் அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் சுந்தர், வனக்குழு தலைவர் என்.டி.எஸ்.சுபாஷ், முன்னாள் துணைத்தலைவர் துளசி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் கவசநல்லாத்தூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கடம்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. பொறுப்பாளர் கே.ரமேஷ் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கினார். இதில் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் சுரேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பூபாலன், நிர்வாகிகள் முனுசாமி, ஞானம், பாசூரான், முனியன், ஏழுமலை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அதேபோல திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சிற்றம்பாக்கம் கிராமத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு அ.தி.மு.க. திருவள்ளூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சிற்றம் ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் முருகையன், பேரவை செயலாளர் சண்முகம், மேலவை பிரதிநிதி ஏசு, அ.தி.மு.க. நிர்வாகிகள் சத்தியா, சுரேஷ், மதன், பெருமாள், பச்சையப்பன் மற்றும் பலர் உடன் இருந்தார்கள்.

Next Story