மாவட்ட செய்திகள்

நடுவீரப்பட்டு பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு பன்னீர் கரும்புகள் அறுவடை தீவிரம் + "||" + The middle part of the area Paneer cane for the Pongal festival is the intensification of harvest

நடுவீரப்பட்டு பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு பன்னீர் கரும்புகள் அறுவடை தீவிரம்

நடுவீரப்பட்டு பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு பன்னீர் கரும்புகள் அறுவடை தீவிரம்
பொங்கல் பண்டிகைக்கு தேவையான பன்னீர் கரும்புகளை அறுவடை செய்யும் பணி நடுவீரப்பட்டு பகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு கரும்பு ரூ. 13-க்கு விலை போவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நெல்லிக்குப்பம், 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கரும்பு தான். பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்பை உற்பத்தி செய்து வழங்குவதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு தனி இடம் உண்டு.

காவிரியின் கடைமடை பகுதியாக இருக்கும் காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் மற்றும் குறிஞ்சிப்பாடி, நடுவீரப்பட்டு, பண்ருட்டி பகுதிகளிலும் பன்னீர் கரும்புகளை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கிறார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டும் நடுவீரப்பட்டு பகுதி விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்தனர். இந்த பகுதியில் சுமார் 600 ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டு இருந்தன. தற்போது இவை நன்கு செழித்து வளர்ந்து இருந்த நிலையில், அறுவடை பணியை விவசாயிகள் தொடங்கி விட்டார்கள்.இங்கிருந்து கடலூர் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளுர், விழுப்புரம் என்று பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்துவருகிறார்கள். வியாபாரிகள் நேரடியாக விளை நிலத்திற்கே வந்து வாங்கி செல்கின்றனர். இவ்வாறு இருந்தும், தங்களுக்கான உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கவலைபட தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், பன்னீர் கரும்புகளை கடந்த 10 மாதமாக பராமரித்து பாதுகாத்து வந்தோம். ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரைக்கும் செலவு செய்து இருந்தோம். ஒரு ஏக்கரில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கரும்புகள் கிடைத்துள்ளது. ஒரு கட்டுக்கு 20 கரும்புகள் வீதம் வைத்து விற்பனை செய்து வருகிறோம்.

அதோடு, தமிழக அரசு பொங்கல் பரிசுடன் கரும்பு துண்டுகளையும் பொதுமக்களுக்கு வழங்கி வருவதால், அதற்கு தேவையான கரும்புகளை அரசு அதிகாரிகளும் எங்களிடம் வந்து வாங்கி செல்கிறார்கள். கடந்த ஆண்டு ஒரு கரும்பு ரூ.15-க்கு வாங்கிய அதிகாரிகள், தற்போது ரூ.13 ரூபாய்க்கு வாங்கி செல்கிறார்கள். இதே விலைக்கு தான், வெளியூர் வியாபாரிகளும் கேட்கிறார்கள்.

கடந்த ஆண்டு சேலம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வந்த வியாபாரிகள் தற்போது இங்கு வரவில்லை. இதனால் எங்கள் கரும்புகள் விற்பனையாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தான் குறைந்த விலைக்கு அரசு அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் கேட்கிறார்கள். கடந்த ஆண்டை விட ஒரு ரூபாய் கூடுதல் விலை கிடைக்கும் என்று நினைத்து இருந்தோம். ஆனால் நிலைமை தலைகீழாக மாறி விலைகுறைந்து விட்டது. இதனால் நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளோம். ஆகையால் தமிழக அரசு தலையிட்டு பன்னீர் கரும்புக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகைக்கு தித்திக்கும் கரும்புகளை உற்பத்தி செய்து வழங்கும் விவசாயிகளின் நிலை என்னவோ இன்னும் கசப்பாகவே இருக்கிறது என்பதை பன்னீர் கரும்பின் விலை நமக்கு உணர்த்துகிறது. இதை கருத்தில் கொண்டு அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கரும்புக்கு விவசாயிகள் மகிழும் வகையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சம்பா நெற்பயிரில் பேரிழப்பை ஏற்படுத்தும் புகையான் நோய் டெல்டா விவசாயிகள் கவலை
சம்பா நெற் பயிர் புகையான் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் பேரிழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
2. மஞ்சூர் பகுதியில்: காபி மகசூல் அதிகரிப்பு - விலை இல்லாததால் விவசாயிகள் கவலை
மஞ்சூர் பகுதியில் காபி மகசூல் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
3. குந்தாவில் கடும் பனிப்பொழிவு: தேயிலை செடிகள் கருகியதால் விவசாயிகள் கவலை
குந்தா தாலுகாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை செடிகள் கருகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
4. கொடைக்கானல் மலைப்பாதையில் கனரக வாகனங்களுக்கு தடை: நடுவழியில் நிற்கும் லாரிகளால் காய்கறிகள் அழுகும் அவலம் - விவசாயிகள் கவலை
கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், காய்கறி ஏற்றி வந்த லாரிகள் நடுவழியில் நிற்கின்றன. காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
5. நெல்லிக்குப்பம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை பணி தீவிரம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
நெல்லிக்குப்பம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன் விலை வீழ்ச்சியடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.