மாவட்ட செய்திகள்

புதுச்சத்திரம் அருகேஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி பலி + "||" + Near putuccattiram Ambulance Killing Worker Kills

புதுச்சத்திரம் அருகேஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி பலி

புதுச்சத்திரம் அருகேஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி பலி
புதுச்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
புவனகிரி, 

புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியாண்டிகுழி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் பெரியப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். கடலூர்- சிதம்பரம் சாலையில் சென்ற போது, எதிரே பெரியப்பட்டில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த ஆம்புலன்ஸ் ஒன்று ராமச்சந்திரன் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான ராமச்சந்திரன் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ராமச்சந்திரன் மகன் முத்துவேல், புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஆம்புலன்ஸ் டிரைவர் சென்னை ராமாபுரத்தை சேர்ந்த ஞானபிரகாசம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பஸ் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி
பொறையாறு அருகே பஸ் மோதி நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
2. வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலி
நெல்லை மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலியானார்கள்.
3. விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு: இனி விபத்துக்கள் நேராமல் உறுதி செய்வோம் - விமானப்படை தளபதி தனோவா பேட்டி
அருணாசல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்ட நிலையில் அதை ஆய்வு செய்து இனி விபத்துக்கள் நேராமல் உறுதி செய்வோம் என விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கூறினார்.
4. முதுமலையில், மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு
முதுமலையில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
5. காரமடை அருகே சரக்கு வேன் மோதி ஆசிரியர் உள்பட 2 பேர் பரிதாப சாவு
காரமடை அருகே நடந்த விபத்தில் ஆசிரியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அதிகம் வாசிக்கப்பட்டவை