மாவட்ட செய்திகள்

மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா + "||" + At the Union of Minjur Pongal Festival

மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா

மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
மீஞ்சூர்,

விழாவுக்கு மீஞ்சூர் ஒன்றிய கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம் தலைமை தாங்கி பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் ஒன்றிய ஆணையாளர் கவுரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏகாம்பரம், சிவக்குமார், இளங்கோவன், சுகாதார ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், சுகாதார அலுவலர் பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர்கள் ராஜேஷ் கண்ணா, முருகன், ஜெகன், ரவிக்குமார் வட்டார அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.