தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வர முடியாது -நாஞ்சில் சம்பத் பேச்சு


தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வர முடியாது -நாஞ்சில் சம்பத் பேச்சு
x
தினத்தந்தி 12 Jan 2019 11:15 PM GMT (Updated: 12 Jan 2019 10:49 PM GMT)

தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வர முடியாது என நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பாவை விழாவில் கலந்து கொண்ட நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை, கொலை தொடர்பான ஆவணப்படத்தை டெல்லியில் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பான குற்றச்சாட்டிற்கு முதல்–அமைச்சர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். உண்மையை உலகிற்கு தெரிவிக்க வேண்டும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தது சமூகநீதிக்கு எதிராக தொடரப்பட்ட யுத்தம். 3 சதவீதம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் எதற்கு? தமிழகத்தில் தாமரை மலரும் என்று கூறிவரும் தமிழிசை சவுந்தரராஜனின் கனவு என்றுமே நிறைவேற போவது இல்லை. தமிழகத்தில் எப்போதும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரமுடியாது. வகுப்புவாத சக்திகளுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக எனது பிரசாரம் இருக்கும். தினகரன், வைகோவிடம் மீண்டும் செல்ல மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story