ஆசிரியைக்கு விருப்ப ஓய்வு வழங்க லஞ்சம் கேட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை


ஆசிரியைக்கு விருப்ப ஓய்வு வழங்க லஞ்சம் கேட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Jan 2019 4:30 AM IST (Updated: 13 Jan 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில், ஆசிரியைக்கு விருப்ப ஓய்வு வழங்க லஞ்சம் கேட்ட கல்வி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

திருவாரூர்,

திருவாரூர் துர்காலயா ரோட்டில் கமலாம்பாள் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் செல்வி (வயது 55) என்பவர்், ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்். இவர் தனக்கு விருப்ப ஓய்வு வழங்கக்கோரி வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்். இது தொடர்்பான கோப்புகளில் கையெழுத்திட வட்டார கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம் தனக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆசிரியை செல்வி, வட்டார கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் விருப்ப ஓய்வு வழங்கிட வேண்டும் என வலியுறுத்துவதும், அதற்கு அவர், தனக்கு லஞ்சமாக ரூ.15 ஆயிரம் வேண்டும் என கேட்பதும் தொடர்பான உரையாடல் ஆடியோ ‘வாட்ஸ் அப்’பில் வைரலாக பரவியது.

இதையடுத்து திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மாரிமுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் வட்டார கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story