பூதப்பாண்டி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்
பூதப்பாண்டி அருகே டாஸ்மாக் கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பூதப்பாண்டி,
பூதப்பாண்டியை அடுத்த துவரங்காட்டில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அந்த பகுதி பொதுமக்கள் அந்த கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால், அங்கிருந்து கடை அகற்றப்பட்டது.
பூதப்பாண்டியை அடுத்த துவரங்காட்டில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அந்த பகுதி பொதுமக்கள் அந்த கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால், அங்கிருந்து கடை அகற்றப்பட்டது.
இந்த நிலையில் பூதப்பாண்டி அருகே உள்ள ஈசாந்திமங்கலம் பகுதியில் தொந்திக்கரை ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தில் நேற்று டாஸ்மாக் கடையை திறக்க திட்டமிட்டு இருந்தனர்.
இது அந்தப்பகுதி பொதுமக்களுக்கு தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கே டாஸ்மாக் கடை முன் பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என்று கோஷமிட்டபடி இருந்தனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த பூதலிங்கம்பிள்ளை, பா.ஜனதாவை சேர்ந்த கோலப்பன், விசுவ இந்து பரிஷத்தை சேர்ந்த காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் பூதப்பாண்டி போலீசாருக்கு தெரிய வந்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது டாஸ்மாக் கடையை எக்காரணம் கொண்டும் இங்கு திறக்கக்கூடாது என்று பொது மக்கள் வலியுறுத்தினார்கள். அதை ஏற்று அதிகாரிகளுடன் பேசி கடையை திறக்காமல் பார்த்து கொள்கிறோம் என்று போலீஸ் தரப்பில் கூறியதாகவும், அதைத்தொடர்ந்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருந்த போதிலும், டாஸ்மாக் கடை திறக்க இருந்த இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story