அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தக்கூடாது கிளை கூட்டத்தில் தீர்மானம்


அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தக்கூடாது கிளை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 13 Jan 2019 10:30 PM GMT (Updated: 13 Jan 2019 3:49 PM GMT)

அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தக்கூடாது என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிளை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி, 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார கிளை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவி மரியசாந்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மதிவாணன், ரோஸ்லின்மேரி, மரியகப்ரேல் சுந்தரம், அறிவரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தொடக்க பள்ளிகளை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைப்பதை கைவிட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தக்கூடாது. சத்துணவு மையங்களை மூடும் நட வடிக்கையை அரசு கைவிட வேண்டும்.

அங்கன்வாடிகளை மேம்படுத்துவது ஏற்புடையது தான் என்றாலும் அதற்கான வழி முறைகளை நெறிமுறை ஏற்படுத்த வேண்டும். சரியான நெறிமுறைகள் வகுத்து அதை அனைத்து சங்கங்களுடனும் முறையான கூட்டம் நடத்தி செயல்படுத்த வேண்டும். அங்கன்வாடி மாறுதல் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக ஜாக்டோ-ஜியோவின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 18-ந்தேதி மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதில் அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Next Story