தஞ்சை மாவட்டத்தில் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை புதிதாக பதவி ஏற்ற போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் பேட்டி


தஞ்சை மாவட்டத்தில் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை புதிதாக பதவி ஏற்ற போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் பேட்டி
x
தினத்தந்தி 13 Jan 2019 10:45 PM GMT (Updated: 13 Jan 2019 9:27 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பதவி ஏற்ற போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த செந்தில்குமார், ராஜபாளையத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 11–வது பட்டாலியன் கமாண்டராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 11–வது பட்டாலியன் கமாண்டராக பணியாற்றி வந்த மகேஷ்வரன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இவர் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியில் சேர்ந்தார். பின்னர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த இவர் விருதுநகர், சென்னை உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி உள்ளார்.

இதையடுத்து புதிய போலீஸ் சூப்பிரண்டாக மகேஷ்வரன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:–

தஞ்சை மாவட்டத்தில் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டம்– ஒழுங்கு பாதுகாக்கப்படும். குற்றங்கள் நடைபெறாத வண்ணம் அனைத்து பாதுகாப்புகளும் ஏற்படுத்தப்படும். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போலீஸ் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story