பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்த காவலாளி மர்மஉறுப்பு அறுத்து படுகொலை தனியார் நிறுவன ஊழியர் கைது
பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்து வந்த காவலாளி மர்மஉறுப்பு அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் பணிபுரிந்து வந்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
நவிமும்பை தலோஜா எம்.ஐ.டி.சி.யில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் ஹரிநாராயண் குப்தா (வயது 25). நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் ஊழியர்கள் அங்கு வந்தபோது, காவலாளி ஹரிநாராயண் குப்தா அவரது அறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
மேலும் அவரது மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு இருந்தது. அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், அவரை கொலை செய்தது அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் லோரகுநாத் (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
காவலாளி தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன. அதன் விவரம் வருமாறு:-
ஹரிநாராயண் குப்தா எம்.ஐ.டி.சி.யில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பெண்களை மயக்கி தனது அறைக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இது ஊழியர் லோரகுநாத்துக்கு அவர் மீது கோபத்தை உண்டாக்கியது. இது தொடர்பாக காவலாளியை அவர் கண்டித்து உள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் கோபம் அடைந்த லோரகுநாத் அவரது மர்மஉறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

Related Tags :
Next Story