மாவட்ட செய்திகள்

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது + "||" + A young man who harassment a student by word of desire to marry

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மூலக்குளம்,

புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.(வயது 23). இவர் பிளஸ்–2 மாணவி ஒருவருடன் பழகி வந்தார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது அந்த மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் தெரிவித்தனர். குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

உடனே அவர்கள் இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், உதவி சப்–இன்ஸ்பெக்டர் ஜான் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த விவசாயி கைது
வேதாரண்யம் அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
2. காதலியுடன் காட்டுப்பகுதியில் சென்றபோது தகராறு: என்ஜினீயரிங் மாணவர் கொலை வழக்கில் 2 பேர் கைது
காதலியுடன் காட்டுப் பகுதியில் சென்ற என்ஜினீயரிங் மாணவரை கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. சிங்காரப்பேட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
சிங்காரப்பேட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் 5 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
புதுக்கோட்டைவிசைப் படகு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
5. வேளாங்கண்ணி அருகே, முன்விரோதத்தில் பெண்ணை வெட்டிக்கொலை செய்த ரவுடி கைது
வேளாங்கண்ணி அருகே முன்விரோதத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.