சிதம்பரம் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிதம்பரம் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா தலைமை தாங்கினார்.
பரங்கிப்பேட்டை,
முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், தாசில்தார் ஹரிதாஸ், முன்னாள் நகர்மன்ற தலைவர் எம்.எஸ்.என்.குமார், முன்னாள் துணைத்தலைவர் செந்தில்குமார், தலைமைக்கழக பேச்சாளர் தில்லைகோபி, ஒன்றிய செயலாளர் அசோகன், எம்.ஆர்.கே. சர்க்கரை ஆலை துணைத்தலைவர் விநாயகம், நகராட்சி பொறியாளர் மகாதேவன், ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் சண்முக சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி மேலாளர் காதர்கான் வரவேற்புரையாற்றினார். அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 350 பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கினார்.
இதில் நிர்வாகிகள் தில்லை சேகர், முருகையன், கோவி.ராசாங்கம், சிவ.சிங்காரவேலு, சந்தர்ராமஜெயம், செழியன், கருப்புராஜா, கூட்டுறவு சங்க தலைவர் கணேஷ், நகராட்சி மேற்பார்வையாளர் ரமேஷ், ஆய்வாளர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story