மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்லமாட்டார்கள் : சித்தராமையா சொல்கிறார் + "||" + Congress MLAs will not go to BJP: Siddaramaiah says

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்லமாட்டார்கள் : சித்தராமையா சொல்கிறார்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்லமாட்டார்கள் : சித்தராமையா சொல்கிறார்
கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டார்கள் என்றும் முன்னாள் முதல்-மந்திரி சித்த ராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.எ.க்கள் 3 பேர் மும்பையிலும், மேலும் சிலர் ெடல்லியில் முகாமிட்டு இருப்பதாக தகவல்கள் ெவளியாகி இருக்கிறது. இதற்கிடையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்கவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் நேற்று காலையில் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் மந்திரிகளுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சிக்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார்.

பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பற்றியும், மும்பையில் சிலர் இருப்பது பற்றியும் சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டார்கள். அவ்வாறு வரும் தகவல்கள் உண்மையல்ல. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல இருப்பதாக வதந்தி பரவுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்கிறது. இதற்காக எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேரப்போவதாக பா.ஜனதாவினர் பொய் தகவல்களை கூறி வருகின்றனர்.

எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியில் தான் இருக்க வேண்டுமா?, வேறு எங்கும் செல்லக்கூடாதா?. எம்.எல்.ஏ.க்கள் மும்பை செல்வதில் எந்த தவறும் இல்லை. அவர்களது விருப்பப்படி மும்பை சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வருகிறார்கள். இதனை பெரிதுபடுத்த வேண்டாம். கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி: கூட்டணி அரசின் முடிவுக்கு எதிர்ப்பு - சித்தராமையா பேச்சு
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி என்ற கூட்டணி அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக சித்தராமையா கூறியுள்ளார்.
2. ஜனதா தளம்(எஸ்) கட்சியினர், பா.ஜனதாவுக்கு வாக்களித்ததாக மந்திரி ஜி.டி.தேவேகவுடா கூறியது ஆச்சரியம் அளிக்கிறது - சித்தராமையா பேட்டி
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொண்டன. மைசூரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜயசங்கர் போட்டியில் உள்ளார்.
3. சிறுபான்மையின மக்கள் பா.ஜனதாவுக்கு ஓட்டுப்போட வேண்டாம் - சித்தராமையா பேச்சு
ஹாசன் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார்.
4. பா.ஜனதா மேலிடத்திற்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி கொடுத்தது குறித்து லோக்பால் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - சித்தராமையா பேட்டி
பா.ஜனதா மேலிடத்திற்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி கொடுத்தது குறித்து லோக்பால் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
5. ஹாசன் மாவட்ட காங்கிரசாருக்கு சித்தராமையா அதிரடி உத்தரவு
சித்தராமையாவை சந்தித்து பேசிய ஹாசன் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், எக்காரணம் கொண்டும் ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆதரிக்க மாட்டோம் என்று பிடிவாதமாக கூறினர். அவர்களிடம், மேலிட உத்தரவுப்படி ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.