கடையநல்லூர் அருகே பரிதாபம் கார் மோதி போலீஸ் ஏட்டு பலி
கடையநல்லூர் அருகே கார் மோதி போலீஸ் ஏட்டு பரிதாபமாக பலியானார்.
அச்சன்புதூர்,
கடையநல்லூர் அருகே கார் மோதி போலீஸ் ஏட்டு பரிதாபமாக பலியானார்.
போலீஸ் ஏட்டுநெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இடைகாலை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 36). இவர் சேர்ந்தமரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.
இவர் சம்பவத்தன்று பெட்ரோல் போடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் நயினாரகரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்குக்கு சென்றார். பின்னர் அங்கு பெட்ரோல் போட்டுவிட்டு, வீட்டிற்கு திரும்பினார்.
பரிதாப சாவுகொல்லம்– திருமங்கலம் ரோட்டில் சென்றபோது, அந்த பகுதியில் வந்த கார் எதிர்பாராதவிதமாக மாரியப்பன் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாரியப்பன், பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.