கேரளாவிற்கு லாரியில் 163 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது
கேரளாவிற்கு லாரியில் 163 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
செங்கோட்டை,
கேரளாவிற்கு லாரியில் 163 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
போலீசார் சோதனைதமிழகம்– கேரள எல்லைப்பகுதியான நெல்லை மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் புளியரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த ஒரு லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் இதுகுறித்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
ரேஷன் அரிசி கடத்தல்விசாரணையில் அவர் கோவை அருகே உள்ள பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த சுகைபு (வயது 35) என்பதும், அவர் பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து லாரியில் 163 ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவிற்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் ரேஷன் அரிசி மூட்டைகளையும், லாரியையும் பறிமுதல் செய்து, உணவு கடத்தல் குற்ற புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.