மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2019 5:03 AM IST (Updated: 18 Jan 2019 5:03 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

சேலம்,

தலைவாசல் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைவாசல் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு தலைவாசல் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமசாமி, மருதமுத்து எம்.எல்.ஏ.ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஜெகதீசன், தலைவாசல் ஒன்றிய அவை தலைவர் இளங்கோவன், கூட்டுறவு சங்க தலைவர்கள் பெரியதம்பி, வேல்முருகன், பாலகிருஷ்ணன், ராமசாமி, முன்னாள் ஒன்றியகுழு உறுப்பினர்கள் மெய்யன், வரகூர் ராமசாமி, சேகர், ராமனாதன், தலைவாசல் ஒன்றிய பிரதிநிதி மும்முடி செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தாரமங்கலத்தில் சேலம் புநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சின்னுசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு எம்.எல்.ஏக்கள் ராஜா, வெற்றிவேல், மனோன்மணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் பல்பாக்கி கிருஷ்ணன், கோவிந்தன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாதேசன், ஏழுமலை, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளர்கள் துரைராஜ், காங்கேயன், நகர துணை செயலாளர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓமலூரை அடுத்த காடையாம்பட்டியில் ஒன்றிய நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி. ஆர் பிறந்தநாள் விழா காடையாம்பட்டி சந்தைபேட்டை, தாராபுரம் ஆகிய பகுதிகளில் கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் சித்தேஷ்வரன், நகர செயலாளர் கணேசன் ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன், சிவபெருமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றிவேல் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில் முன்னாள் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட இணை செயலாளர் ஈஸ்வரி, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சுந்தரராஜன், ஒன்றிய அவை தலைவர் குப்புசாமி, ஒன்றிய இணை செயலாளர் கோகிலா, துணை செயலாளர் அன்பு, ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராணி, நடுப்பட்டி மணி, கூட்டுறவு சங்க தலைவர்் ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தாரமங்கலம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் அணைமேடு தங்கவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பிரபுவேல்பாரி வரவேற்றார். செல்லமுத்து, மணியன், அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாநில அமைப்பு செயலாளர் எஸ்.கே.செல்வம், மேற்கு மாவட்ட செயலாளர் மாதேசன் ஆகியோர் மாலை அணிவித்தனர். இதில் அ.ம.மு.க. நிர்வாகிகள் பழனியப்பன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைவாசல் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேவியாக்குறிச்சி கிராமத்தில் எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் கோமதுரை, தலைவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட துணை செயலாளர் ஸ்ரீராம் இனிப்பு வழங்கினார். விழாவில் நிர்வாகிகள் சுந்தரம், கண்ணன், ராஜா, சிங்காரம், வெற்றி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதே போன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Next Story