கூடுவாஞ்சேரியில் கடையின் பூட்டை உடைத்து பணம், செல்போன்கள் திருட்டு


கூடுவாஞ்சேரியில் கடையின் பூட்டை உடைத்து பணம், செல்போன்கள் திருட்டு
x
தினத்தந்தி 19 Jan 2019 3:30 AM IST (Updated: 18 Jan 2019 10:43 PM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரியில் கடையின் பூட்டை உடைத்து பணம், செல்போன்கள் திருடப்பட்டது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் செல்போன் கடை உள்ளது. நேற்று முன்தினம் ஊழியர்கள் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது கடையில் உள்ள கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.36 ஆயிரத்து 427 மற்றும் 3 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து கடை ஊழியர் சுரேஷ் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story