கணவருடன் தகராறு; இளம்பெண் தற்கொலை - புதுக்கடை அருகே பரிதாபம்


கணவருடன் தகராறு; இளம்பெண் தற்கொலை - புதுக்கடை அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 19 Jan 2019 4:13 AM IST (Updated: 19 Jan 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கடை,

புதுக்கடை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

புதுக்கடை அருகே தவிட்டவிளையை சேர்ந்தவர் ரகுராஜன் (வயது 35). இவருடைய மனைவி ரூபினி (30). இவர்களுக்கு 10 மாத கைக்குழந்தை உள்ளது.

ரகுராஜனுக்கும், ரூபினிக்கும் திருமணமாகி 2 வருடம் ஆகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ரகுராஜனும், ரூபினியும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். பின்னர் ரூபினிக்கும், ரகுராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் உள்ள மின்விசிறியில் ரூபினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த புதுக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரூபினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கணவருடன் ஏற்பட்ட தகராறில் ரூபினி தற்கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூபினிக்கு திருமணமாகி 2 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.


Next Story